பிரபல தமிழ் ஹீரோயின் தூக்கிட்டு தற்கொலை: அதிர்ச்சியில் சினிமா உலகம்!

சென்னை வளசரவாக்கத்தில் சினிமா நடிகை தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். சென்னை வளசரவாக்கத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்தவர் ரியாமிகா(26), இவர் குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம், எக்ஸ் வீடியோஸ், அகோரி உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இவருடன் இவரது தம்பி பிரகாஷ் தங்கி உள்ளார். இந்த நிலையில் நேற்று பிரகாஷ், ரியாமிகாவின் காதலன் தினேஷ் ஆகியோர், ரியாமிகா நீண்ட நேரமாக வெளியே வராததால் அவரது அறையின் கதவை தட்டி உள்ளனர். நீண்ட நேரம் ஆகியும் கதவு திறக்காததால் சந்தேகம் அடைந்து பின்புறம் உள்ள ஜன்னல் வழியாக பார்த்தபோது ரியாமிகா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது.

இதுகுறிந்து வளசரவாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன், சப் இன்ஸ்பெக்டர் தீர்த்தகிரி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

விசாரணையில் தெரிய வந்த விடயங்களாவன,

ரியாமிகா தினேஷ் என்பவரை காதலித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் வெளியே சென்று விட்டு இரவு தாமதமாக வந்துள்ளார். தனது காதலனை பார்க்க வேண்டும் என்று செல்போனில் தினேஷை அழைத்துள்ளார்.

ஆனால் நள்ளிரவு ஆகி விட்டதால் காலையில் வந்து பார்ப்பதாக கூறி செல்போன் இணைப்பை துண்டித்துள்ளார். இதையடுத்து இரவு நேரத்தில் எதற்கு போன் செய்து தொந்தரவு செய்கிறாய் என்று ரியாமிகாவின் தம்பி பிரகாஷ் கேட்டு விட்டு அவரது அறைக்கு தூங்க சென்று விட்டார். நேற்று காதலன் தினேஷ் வீட்டிற்கு வந்துள்ளார். ரியாமிகா தினமும் தாமதமாக எழுந்து கொள்வதால் கண்டு கொள்ளாமல் இருந்து விட்டனர்.

இருவரும் சேர்ந்து சமையல் செய்து விட்டு ரியாமிகாவை எழுப்ப முயன்றபோது தான் ரியாமிகா தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது. ரியாமிகா வருமானத்தில் தான் அவரது குடும்பம் நடந்து கொண்டிருந்தது. தற்போது சரியாக பட வாய்ப்புகள் இல்லாததால் வருமானமும் இல்லை. மேலும் காதலனுடன் தகராறு என பல்வேறு பிரச்சனைகளில் சிக்கி கடும் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இதன் காரணமாகத் தான் தற்கொலை செய்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here