குழந்தைகள் உள்ளோர் அவசியம் அறிந்திருங்கள்… பனடோல் Drops VS பனடோல் Syrup

தற்போது சந்தையில் சிறுவர்களுக்கான பனடோல் உற்பத்தியில் பனடோல் Syrup மற்றும் பனடோல் Drops என இரு வகையான தயாரிப்புகள் காணப்படுகின்றன.

இரு தயாரிப்புக்களும் அடிப்படையில் பரசிடமோல் (paracetamol) எனும் மருந்தையே கொண்டிருக்கின்றன. ஆனாலும் இவை கொண்டுள்ள மருந்தின் அளவுகள் (செறிவு) மாறுபட்டன என்பதே பெற்றோர் கவனத்தில் கொள்ளவேண்டிய மிகவும் முக்கியமான விடயமாகும்.

பனடோல் Syrup தயாரிப்பை நோக்கினால் அதில் 120mg/5ml எனும் செறிவில் பரசிடமோல் மருந்து காணப்படும். அதாவது 5ml அளவு Syrup இல் 120mg பரசிடமோல் காணப்படும்.

பனடோல் Drops தயாரிப்பை நோக்கினால் அதில்  100mg/ml எனும் செறிவில் பரசிடமோல் மருந்து காணப்படும். அதாவது 01ml அளவு Drops இல் 100mg பரசிடமோல் காணப்படும். (05ml இல் 500mg மருந்து)

பரசிடமோல் மருந்தானது சிறுவர்களுக்கு அவர்களின் உடல் நிறைகளுக்கு ஏற்ப வழங்கப்பட வேண்டும். கூடுதலான அளவுகளில் கொடுக்கப்படும் போது அது அவர்களில் ஈரல் பாதிப்பை உண்டுபண்ணும்.

சிறுவர்களுக்கு சரியான அளவு என்பது 01kg நிறைக்கு 15mg பரசிடமோல் வழங்க வேண்டும்.
உதாரணமாக 06kg நிறையுடைய குழந்தைக்கு 90mg வழங்கப்பட வேண்டும். இதன்படி Syrup கொடுப்பதாயின் 3.75ml உம் Drops கொடுப்பதாயின் 0.9ml உம் கொடுக்கப்பட வேண்டும்.

எனவே Syrup மற்றும் Drops என்பவற்றுக்கிடையிலான செறிவு ரீதியான அளவு வேறுபாட்டை உணர்ந்து உங்கள் குழந்தைகளுக்கு குறித்த மருந்தை உரிய அளவுகளில் வழங்குவதன் மூலம் பாதிப்புக்களை தவிர்ப்போம். மேலதிக ஆலோசனைகளை வைத்தியர்களிடம் பெற்றுக்கொள்ளுங்கள்.

Health Message From
D-Care Hospital
Palamunai

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here