கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயி மன உழைச்சலுக்கு உள்ளான நிலையில் தற்கொலை!

கஜா புயலின் தாக்கத்தினால் தன் விவசாயத்தை முற்றாக இழந்த விவசாயி ஒருவர் மனமுடைந்து தற்கொலை செய்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய விவசாயி திருச்செல்வம் எனபவரே இவ்வாறு தற்கொலை செய்துள்ளார்.

‘கஜா’ புயலால் 30 ஏக்கரிலான பலா, தேக்கு உள்ளிட்டவை சேதமானதால், மனமுடைந்த விவசாயி விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டார்.

புயலால் இவருக்கு சொந்தமான 30 ஏக்கரிலான பலா, தேக்கு, சவுக்கு, நெல் உள்ளிட்டவை சேதமடைந்தன.

இதையடுத்து குறித்த விவசாயி சில நாட்களாக மன உழைச்சலுக்கு உள்ளாகியிருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில்,  கடந்த சனிக்கிழமை நெல்லுக்கு தெளிக்கும் பூச்சிக்கொல்லி மருந்தை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அதனை பார்த்த அவரது வீட்டார் சிகிச்சைக்காக பட்டுக்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி திருச்செல்வம் இன்று காலை உயிரிழந்துள்ளார். இவர் ஹைட்ரோகார்பன் எதிர்ப்பு போராட்டங்களில் தீவிரமாக ஈடுபட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here