மட்டக்களப்பில் சம்பந்தருடன் கைகோர்த்தார் அம்மான்!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாலையடிவட்டை வட்டாரத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற யோகநாதன் ரஜனி தவிசாளராகவும் பிரதிதவிசாளராக தமிழ் தேசிய கூட்டமைப்பின்; தும்பங்கேணி வட்டாரத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற நாராயணபிள்ளை தர்மலிங்கம் தெரிவுசெய்யப்பட்டனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் உள்ளுராட்சி மன்றங்களை அமைக்கும் பணிகள் போரதீவுப்பற்று பிரதேசசபை இன்று செவ்வாய்க்கிழமை (03-04)காலை முதல் அமர்வு கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் எம்.வை.எம்.சலீம் தலைமையில் ஆரம்பமானது.
இன்றைய அமர்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் 08 உறுப்பினர்களும் ஐக்கிய தேசிய கட்சி 03 உறுப்பினர்களும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் 02 உறுப்பினர்களும் தமிழ் தேசிய விடுதலை கூட்டமைப்பு 01 உறுப்பினரும், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் ஒருவரும், மற்றும் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி உறுப்பினர் ஒருவரும், சுயேட்சை குழு 02இன் இரு உறுப்பினர்களுமாக 18 உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
இதனடிப்படையில் தவிசாளரை தெரிவுசெய்யும் வகையில் திறந்த வாக்கெடுப்பு கோரியதற்கு இணங்க திறந்த வாக்கெடுப்பு நடாத்தப்பட்டது.
தவிசாளருக்கான வாக்கெடுப்பில் சுயேட்சை குழு 02இல் தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினரான வி.ஆயுஷ்மனும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் யோகநாதன் ரஜனியும் ஆகியோருக்கு இடையில் நிலவிய போட்டியின் அடிப்படையில் 09 உறுப்பினர்கள் ஆதரவாகவும் எதிராக எட்டு உறுப்பினர்களும் நடுநிலையாக ஒருவரும்; வாக்களித்தனர்.
இதன்போது தமிழ் தேசிய விடுதலைக்கூட்டமைப்பு நடுநிலையாக வாக்களிப்பில் கலந்துகொண்டதுன் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு ஆதரவாக வாக்களித்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here