இந்தவார ராசிபலன்கள் 25.11.2018-1.12.2018

செவ்வாய், சந்திரன் ஓரளவு நற்பலன் தருவர். அனுகூல சூழல் அமைந்து உதவும். சாதனை நிகழ்த்தும் எண்ணத்துடன் பணிபுரிவீர்கள். தம்பி தங்கைக்கு உதவுவீர்கள். வாகனப்பராமரிப்பு செலவு கூடும். பிள்ளைகளின் செயல்களில் மாறுபட்ட தன்மை இருக்கும். விருந்து விழாவில் ஆரோக்கியம் உணர்ந்து கலந்து கொள்ளலாம். நண்பரின் கவனக்குறைவான சொல் வருத்தம் தரும். மனைவி வழி உறவினர்கள் கூடுதல் அன்பு பாசம் கொள்வர். தொழில் வியாபாரத்தில் இடையூறுகளை தாமதமின்றி சரி செய்யவும். பணியாளர்கள் நிலுவை பணிகளை நிறைவேற்றுவது நல்லது. பெண்கள் செலவில் சிக்கனம் பின்பற்றுவர். மாணவர்கள் படிப்பில் கூடுதல் பயிற்சியால் முன்னேறலாம்.

பரிகாரம்: சாஸ்தா வழிபாடு இடர் நீக்கும்.


புதன், குரு, ராகு, சந்திரனால் அளப்பரிய நன்மை கிடைக்கும். வசீகரமாக பேசுவீர்கள். வாழ்வில் வளம் பெற புதிய திட்டம் உருவாகும். வாகனத்தின் பயன்பாடு அளவுடன் இருக்கும். பிள்ளைகள் பெற்றோருக்கு பெருமை சேர்க்கும் செயலில் ஈடுபடுவர். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். மனைவியின் சொல்லும் செயலும் குளறுபடியாகலாம். விருந்து விழாவில் கலந்து கொள்வீர்கள். வெளியூர் பயணத்தில் உரிய பாதுகாப்பு வேண்டும். தொழில் வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்களால் வளர்ச்சி கூடும். பணியாளர்கள் அதிக தொழில்நுட்பம் அறிந்து செயல்படுவர். பெண்கள் வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவர். மாணவர்கள் படிப்பில் அதிக மதிப்பெண் பெறுவர்.

பரிகாரம்: நரசிம்மர் வழிபாடு நன்மை தரும்.


சுக்கிரன், சந்திரன், சூரியனால் ராஜயோகபலன் கிடைக்கும். பணிகளை ஆர்வமுடன் நிறைவேற்றுவீர்கள். உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். வீடு வாகனத்தில் கூடுதல் வசதி பெற சில மாற்றம் செய்வீர்கள். பிள்ளைகள் புதிய விஷயங்களை அறிந்து கொள்வர். மருத்துவ சிகிச்சை பெறுவதால் நோய் தொந்தரவு குறையும். நண்பரிடம் கடனாக கொடுத்த பணம் திரும்ப கிடைக்கும். மனைவி வழி சார்ந்த உறவினர்களின் உதவி கிடைக்கும். வெளியூரிலிருந்து சுபசெய்தி வந்து சேரும். தொழில் வியாபாரத்தில் அபிவிருத்தி பணி சிறப்பாக நிறைவேறும். பணியாளர்கள் நற்பெயரும் சலுகையும் பெறுவர். பெண்களுக்கு தாய் வீட்டு உதவி கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பில் சிறந்த தரத்தேர்ச்சி கிடைக்கும்.

பரிகாரம்: சனீஸ்வரர் வழிபாடு வெற்றி தரும்.


புதன், குரு, சுக்கிரன், சனீஸ்வரர் அனுகூல அமர்வில் உள்ளனர். வாழ்வியல் நடைமுறைகளை உணர்ந்து செயல்படுவீர்கள். அவமதித்தவர் அன்பு பாராட்டுகின்ற சூழல் உருவாகும். வாகனப்பயணம் இனிய அனுபவம் தரும். பிள்ளைகள் பெற்றோர் சொல்லை மதித்து, நண்பருக்கு இணையாகப் பழகுவர். விருந்து விழாவில் கலந்து கொள்வீர்கள். மனைவி கருத்து இணக்கமுடன் குடும்பநலன் பாதுகாத்திடுவார். எதிர்பார்த்த சுபசெய்தி வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். தொழில் வியாபாரம் செழித்து தாராள பணவரவு கிடைக்கும். பணியாளர்கள் செயலாற்றலுடன் பணி இலக்கை பூர்த்தி செய்வர். பெண்கள் கணவரின் அன்பில் மகிழ்ச்சிகர வாழ்வு நடத்துவர். மாணவர்களுக்கு படிப்பில் உள்ள சந்தேகம் தெளிவடையும்.

பரிகாரம் : தன்வந்திரி வழிபாடு ஆரோக்கியம் தரும்.


கேது, சுக்கிரன், சந்திரனால் ஓரளவு நன்மை ஏற்படும். மனதில் குழப்பமான தன்மை இருக்கும். நண்பரின் அறிவுரை மனதில் நல்ல மாற்றம் தரும். வாகனத்தில் பராமரிப்பு தேவைப்படும். பிள்ளைகளின் படிப்பு செயல்திறன் மேம்பட உதவுவீர்கள். நிர்ப்பந்தக் கடனில் ஒரு பகுதியை செலுத்துவீர்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். மனைவி கருத்து வேறுபாடு தவிர்த்து அன்பு பாராட்டுவார். தொழிலில் உற்பத்தி விற்பனை அதிக உழைப்பால் செழிக்கும். பணியாளர்கள் பாதுகாப்பில் உரிய கவனம் பின்பற்ற வேண்டும். பெண்கள் பிறருக்காக பணப்பொறுப்பு ஏற்க கூடாது. மாணவர்கள் படிப்பு தவிர பிற விவாதம் பேச வேண்டாம்.

பரிகாரம்: விநாயகர் வழிபாடு வினை தீர்க்கும்.


சூரியன், சுக்கிரன், செவ்வாய், ராகு சிறப்பான பலன்களைத் தருவர். வெகுநாள் எதிர்பார்த்த நன்மை எளிதில் வந்து சேரும். வாகனத்தின் பயன்பாடு அதிகரிக்கும். தாய்வழி உறவினர் தேவையான உதவியை வழங்குவர். பிள்ளைகள் ஆன்மிக விஷயங்களை அறிவதில் ஆர்வம் கொள்வர். சொத்து பராமரிப்பில் நம்பகமானவர்களை பணியமர்த்தவும். விவகாரங்களில் சமரசப் பேச்சு சுமுக தீர்வுக்கு வழி வகுக்கும். மனைவியின் அன்பு பாசம் நெகிழ்ச்சியை தரும். தொழில் வியாபாரம் செழிக்க அதிக உழைப்பு தேவைப்படும். பணியாளர்கள் பணியிடச்சூழல் உணர்ந்து பணிபுரிய வேண்டும். பெண்கள் பிரார்த்தனை நிறைவேறி இஷ்டதெய்வ வழிபாடு நடத்துவர். மாணவர்கள் படிப்பில் புதிய பயிற்சி மேற்கொள்வர்.

பரிகாரம்: பெருமாள் வழிபாடு நன்மையை தரும்.


சனீஸ்வரர், குரு, சுக்கிரன் அளப்பரிய நன்மைகளை வழங்குவர். சமயோசிதமாக செயல்படுவீர்கள். பணி சிறந்து முழு அளவில் நல்ல பலன் தரும். சமூக நிகழ்வு இனியதாக அமைந்திடும். புதிய வாகனம் விரும்பியபடி வாங்கலாம். பிள்ளைகளின் எதிர்கால நலன் சிறக்க தேவையானதை செய்வீர்கள். சத்தான உணவும் சீரான ஓய்வும் பின்பற்றி உங்கள் உடல் ஆரோக்கியத்தை பாதுகாத்திடுவீர்கள். மனைவியின் அன்பு நிறைந்த சொல்லும் செயலும் குடும்பத்தில் மகிழ்ச்சியை உருவாக்கும். தொழில் வியாபாரத்தில் அபிவிருத்தி செய்வீர்கள். பணியாளர்கள் பணி இலக்கை எளிதாக நிறைவேற்றுவர். பெண்கள் புத்தாடை வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவர். மாணவர்கள் கவனமுடன் படித்து அதிக மதிப்பெண் பெறுவர்.

பரிகாரம்: சிவன் வழிபாடு சகல நன்மை தரும்.


கேது, சுக்கிரன், சந்திரன் அனுகூலபலன் வழங்குவர். பேச்சில் உண்மை நேர்மை நிறைந்திருக்கும். உறவினரின் வாழ்த்து கிடைக்கும். அறிமுகமில்லாதவருக்கு வீடு வாகனத்தில் இடம் தர வேண்டாம். பிள்ளைகள் சில விஷயங்களில் பிடிவாத குணத்துடன் செயல்படுவர். இஷ்டதெய்வ வழிபாடு பலவித நன்மையையும் உருவாக்கும். மனைவி கருத்து ஒற்றுமையுடன் நடந்து கொள்வார். சுற்றுலா பயணத்திட்டம் செயல் வடிவம் பெறும். தொழில் வியாபாரத்தில் போட்டி குறைந்து லாபம் அதிகரிக்கும். பணியாளர்கள் அதிக வேலைவாய்ப்பை ஏற்றுக்கொள்வர். பெண்கள் குடும்ப விஷயங்களை பிறரிடம் சொல்ல வேண்டாம். மாணவர்கள் படிப்பில் மட்டுமே கவனம் கொள்ளவும்.

சந்திராஷ்டமம்: 25.11.18 காலை 6:00 மணி – 27.11.18 காலை 8:00 மணி
பரிகாரம்: நந்தீஸ்வரர் வழிபாடு நற்பலன் தரும்.


செவ்வாய், புதன், சுக்கிரன் அளப்பரிய நற்பலன் தருவர். குறை சொன்னவரும் பாராட்டுகின்ற இனிய சூழல் உருவாகும். திட்டமிட்ட செயல் திருப்திகரமாக நிறைவேறும். உடன்பிறந்தவர்களின் உதவி கிடைக்கும். வெளியூர் பயணம் உரிய நன்மைகளை பெற்றுத்தரும். பிள்ளைகளின் மகிழ்ச்சிகர செயல்பாடு நிறைவேற உதவுவீர்கள். நோய் தொந்தரவு குறைந்து ஆரோக்கியம் பலம் பெறும். மனைவியின் அன்பு பாசத்தில் மனம் நெகிழ்வீர்கள். தொழில் வியாபாரத்தில் வியத்தகு வளர்ச்சியும் தாராள பணவரவும் கிடைக்கும். பணியாளர்கள் கூடுதல் தொழில்நுட்பம் அறிந்து கொள்வர். பெண்கள் பிள்ளைகளின் நலன் பேணிக்காத்திடுவர். மாணவர்கள் படிப்பில் சிறந்து நண்பருக்கும் உதவுவர்.

சந்திராஷ்டமம்: 27.11.18 காலை 8:01 மணி – 29.11.18 காலை 10:22 மணி
பரிகாரம்: முருகன் வழிபாடு நம்பிக்கை வளர்க்கும்.


சூரியன், குரு, புதன், சந்திரன் அனுகூலபலன் வழங்குவர். தாமதமான பணியில் முன்னேற்றம் ஏற்படும். நண்பர்களிடம் இடம் சூழல் உணர்ந்து பேசுவீர்கள். வாகனத்தில் பராமரிப்பு செய்வதால் பயணம் எளிதாக அமையும். பிள்ளைகளின் எண்ணத்திற்கு முக்கியத்துவம் தருவீர்கள். சத்தான உணவு உண்டு மகிழ்வீர்கள். மனைவியின் பாசம் மிகுந்த பேச்சுகளில் குறை காண வேண்டாம். தொழில் வியாபாரத்தில் போட்டி குறைந்து வளர்ச்சி அதிகரிக்கும். பணியாளர்கள் ஆர்வமுடன் பணித்திறமையை வளர்த்துக் கொள்வர். பெண்கள் உறவினர் வீட்டில் சுப நிகழ்ச்சி நடத்த உதவுவர். மாணவர்கள் படிப்பு தவிர பிற விவாதம் பேசக்கூடாது.

சந்திராஷ்டமம்: 29.11.18 காலை 10:23 மணி – 1.12.18 மதியம் 12:44 மணி
பரிகாரம்: ஆஞ்சநேயர் வழிபாடு நன்மை தரும்.


சூரியன், சுக்கிரன், சனீஸ்வரர், ராகு அனுகூல அமர்வில் உள்ளனர். வாழ்வில் முன்னேற கிடைக்கின்ற வாய்ப்புகளை பயன்படுத்துவீர்கள். உடன்பிறந்தவர்களின் உதவி உண்டு. வீட்டில் ஒற்றுமை நிலைத்திருக்கும். பிள்ளைகளின் குளறுபடியான செயலை இதமான அணுகுமுறையால் சரி செய்ய வேண்டும். இஷ்ட தெய்வ வழிபாடு சில நன்மைகளை தரும். எதிர்ப்பாளர் சொந்த சிரமங்களால் விலகுவர். மனைவியின் நற்செயல் குடும்பத்திற்கு பெருமையை சேர்த்திடும். வெளியூர் பயணம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும். தொழில் வியாபாரத்தில் அபிவிருத்தி செய்வீர்கள். பணியாளர்கள் குறித்த காலத்தில் பணி இலக்கை நிறைவேற்றி சலுகை பெறுவர். பெண்கள் கணவரின் அன்பில் மகிழ்ச்சிகர வாழ்வு நடத்துவர். மாணவர்கள் நன்கு படித்து அதிக மதிப்பெண் பெறுவர்.

சந்திராஷ்டமம்: 1.12.18 மதியம் 12:45 மணி – நாள் முழுவதும்.
பரிகாரம் : துர்க்கை வழிபாடு தைரியம் வளர்க்கும்.


புதன், சுக்கிரன், குரு, கேது வியத்தகு நற்பலன் தருவர். செயல்களை புதிய உத்தியால் நிறைவேற்றுவீர்கள். உடன்பிறந்தவர்களின் அன்பு பாசம் ஊக்கம் தரும். வாகனத்தில் பயன்பாடு அதிகரிக்கும். பிள்ளைகள் படிப்பு செயலாற்றலில் மேம்படுவர். உடல் ஆரோக்கியத்தில் உரிய கவனம் வேண்டும். குடும்ப தேவைகள் தாராள செலவில் பூர்த்தியாகும். மனைவியின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் தருவீர்கள். வீட்டில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் கூடும். தொழில் வியாபாரத்தில் போட்டி குறைந்து தாராள பணவரவு கிடைக்கும். பணியாளர்கள் நேர்த்தியுடன் பணிபுரிவர். விண்ணப்பித்த நிதியுதவி கிடைக்கும். பெண்கள் உறவினர் குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடத்த உதவுவர். மாணவர்கள் படிப்புடன் கலைகளும் பயில்வர்.

பரிகாரம்: தட்சிணாமூர்த்தி வழிபாடு நிம்மதி தரும்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here