இலங்கை விவகாரம் இன்று ஐ.நாவில்!

ஜனநாயகம், மனித உரிமைகள், சட்டவாட்சி என்பவற்றை பாதுகாப்பதில் இலங்கை நாடாளுமன்றத்தின் வகிபாகம் குறித்து இன்று ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் விவாதம் இடம்பெறவுள்ளது.

நாடாளுமன்ற பெரும்பான்மையிருந்த நிலையிலும், ஐதேக ஆட்சியை கவிழ்த்து, பெரும்பான்மையில்லாத மஹிந்த ராஜபக்சவிற்கு பிரதமர் பதவியை வழங்கினார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. இது அரசியலமைப்பிற்கு முரணானது என சட்ட வல்லுனர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஜனநாயகத்திற்கு சாவு மணியடித்த நடவடிக்கையாக இதனை கருதும் சர்வதேச சமூகம், புதிய அரசை அங்கீகரிக்கவில்லை. இதுவரை, ரஷ்யா, சீனா, ஆப்கானிஸ்தான், கியூபா மட்டுமே மஹிந்த அரசை ஆதரித்துள்ளன.

நாடாளுமன்ற பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலையில், நாடாளுமன்றத்தை கலைத்து ஜனாதிபதி உத்தரவிட்டார். உயர்நீதிமன்றம் அதற்கு இடைக்கால தடைவிதித்துள்ளது.

இந்த நிலையில் ஜனநாயகம், மனித உரிமைகள், சட்டவாட்சி என்பவற்றை பாதுகாப்பதில் இலங்கை நாடாளுமன்றத்தின் வகிபாகம் குறித்து இன்று ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் விவாதம் இடம்பெறவுள்ளது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here