வழக்கு தாக்கல் செய்யப்படாத அரசியல் கைதிகள் விரைவில் விடுதலை!

வழக்கு தாக்கல் செய்யப்படாமல் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்க் கைதிகள் விரைவில் விடுதலை செய்யப்படவுள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இது தொடர்பில் நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் இவர்களது விடுதலை குறித்து அமைச்சரவைக்கு அறிவித்திருப்பதாகவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் றோகண லக்ஸ்மன் பியதாச தெரிவிதுள்ளார்.

இதேபோன்று தோட்டத்தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்கு தீர்வுகாண்பது தொடர்பில் அரசாங்கத்தினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஜனவரி மாதத்தில் கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என்று முன்னர் தெரிவிக்கப்பட்டது. அது தொடர்பில் கேட்டபோது. ஜனவரி மாதத்திற்கு முன்னதாகவே கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று அவர் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here