லஹிரு மதுசங்க விடுதலை

மாலைதீவில் சிறையில் வைக்கப்பட்டிருந்த லஹிரு மதுசங்க இன்று (21) விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல்லா யமீன் மீதான கொலை சூழ்ச்சி தொடர்பில் குறித்த நபர் கைது செய்யப்பட்டிருந்தார்.

பாதுகாப்பு உத்தியோகத்தர் பதவிக்காக மாலைதீவு சென்றிருந்த நிலையில் குறித்த நபர் கடந்த 2015 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.

கடந்த மூன்று வருடங்களான அந்நாட்டு உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் குறித்த நபர் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

மாலைதீவு சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள லஹிரு மதுசங்கவை அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் பைஸர் முஸ்தபா சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here