மஹிந்தவிற்கு அடுத்த வில்லங்கம்: ஒழுங்கு புத்தகத்தில் இடம்பெற்றது!

பிரதமரின் செலவீனங்களை இடைநிறுத்தும் பிரேரணையொன்றை ஐக்கிய தேசியக்கட்சியின் ஆறு எம்.பிக்கள் இன்று சமர்ப்பித்திருந்தனர். இந்த பிரேரணை தொடர்பாக அடுத்த அமர்வில் வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது.

நாடாளுமன்றத்தின் அடுத்த அமர்வு வரும் 29ம் திகதி இடம்பெறுகிறது. அன்றைய அமர்வு தொடர்பான நாடாளுமன்ற ஒழுங்கு புத்தகத்தில், மேற்படி பிரேரணையும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

29ம் திகதி இந்த பிரேரணை தொடர்பில் விவாதம் இடம்பெற்று, வாக்கெடுப்பு இடம்பெறும்.

ஏற்கனவே, நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரணையில் தோற்கடிக்கப்பட்டு அரசியலமைப்பிற்கு முரணாகவே மஹிந்த ராஜபக்ச பதவி வகிப்பதாக குற்றம்சாட்டப்பட்டு வரும் நிலையில், பிரதமரின் செலவீனங்களையும் இடைநிறுத்த நாடாளுமன்றம் முடிவு செய்தால், அரசியல் ரீதியான நெருக்கடியை மைத்திரி- மஹிந்த கூட்டணி எதிர்கொள்ளுமென எதிர்பார்க்கப்படுகிறது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here