வட்டுவாகல் பெருங்கடலுடன் கலந்தது!

நந்திக்கடல் நீரேரியில் நீர் நிறைந்து வட்டுவாகல் பகுதியில் உடைப்பெடுத்துள்ளது. இதன்மூலம் நந்திக்கடல் நீரேரியும், முல்லைத்தீவு கடலும் இணைந்துள்ளன. இதனால் நந்திக்கடலில் மீன்பிடி தொழிலில் ஈடுபடுபவர்களின் வாழ்வாதாரம் செழிக்குமென மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கடந்த மூன்று நாட்களாக பெய்த கடும் மழையினால் நந்திக்கடலில் நீர் நிறைந்தது. இதையடுத்து நேற்று (20) நள்ளிரவு உடைப்பெடுத்து, முல்லைத்தீவு கடலுடன் கலந்தது.

43141 ஹெக்டெயர் பரப்பை கொண்ட நந்திக்கடலின் மீன்பிடித் தொழிலை வாழ்வாதாரமாக கொண்ட நூற்றுக்கணக்கான குடும்பங்கள் உள்ளன.

நந்திக்கடலில் நீர் நிறைந்து முல்லைத்தீவு கடலுடன் கலந்தாலே, நந்திக்கடலில் மீன்பிடி செழிக்கும். வழக்கத்தில், நந்திக்கடலில் நீர் நிறைந்ததும் மீனவர்கள், விவசாயிகளுடன் கலந்துரையாடி, மாவட்ட செயலாளரின் அனுமதியுடன் வட்டுவாகல் பகுதியில் ஒரு பகுதி வெட்டப்பட்டு, நீரேரிக்கும் கடலுக்கும் இணைப்பு ஏற்படுத்தப்படும்.

ஆனால் இம்முறை அடைமழை பொழிந்ததையடுத்து, நீரேரி தானே உடைப்பெடுத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here