புதுக்குடியிருப்பில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து தீக்கிரையானது!

புதுக்குடியிருப்பு கோம்பாவில் பகுதியை சேர்ந்த தனியார் பேருந்து ஒன்றே நேற்று முன்தினம் (19) இரவு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. சம்பவதினம் யாழ்ப்பாணத்திற்கான சேவையை முடித்து விட்டு, வீட்டுக்கு முன்பாக வீதியோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்தே தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

“இரவு 11.30 மணியளவில் நாய்கள் கடுமையாக குரைத்தபோது எழுந்து பார்த்தேன். கண்ணாடிகள் வெடித்து பறக்கும் சத்தம் கேட்டது. உடனடியாக வெளியில் வந்து பார்த்தபோது எனது பேருந்து தீப்பிடித்து எரிந்தது.

அருகில் இருந்தவர்களது துணையுடன் முடிந்தவரை தீயை அணைக்க முயற்ச்சித்தேன். பேருந்து பெருமளவு சேதமாகி விட்டது. சுமார் பதினெட்டு இலட்சம் ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளது“ என பேருந்து உரிமையாளர் தெரிவித்தார்.

சம்பவ இடத்துக்கு சென்ற புதுக்குடியிருப்பு பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டனர். விசமிகளால் எரியூட்டப்பட்டதா அல்லது மின்னொழுக்கு காரணமாக தீப்பிடித்ததா என்ற கோணங்களில் கிளிநொச்சி தடயவியல் பொலிசாரின் உதவியுடன் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here