இலங்கை அரசியல் குழப்பத்தால் எல்லோரும் பரபரப்பில் இருந்தாலும், கொஞ்சம் ரிலாக்ஸ் அடைய வைத்தவர்கள் இருவர். வடிவேல் சுரேஷ், வசந் சேனநாயக்க இருவரும் கட்சி தாவி தாவி, காலையில் ஒரு இடம், மாலையில் இடம் என சிரிப்பு மூட்டிக் கொண்டிருந்தார்கள்.
இருவரும் சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வந்தனர்.
இறுதியான கடந்த 14ம் திகதி நாடாளுமன்றம் கூடியபோது, ஐதேக தரப்பிற்கே திரும்பி சென்றனர். இனி கட்சி தாவுவதில்லையென பகிரங்கமாக கூறியுமிருந்தனர். அமைச்சரவையிலிருந்து விலகுவதாக ஜனாதிபதிக்கும் அறிவித்திருந்தனர்.
இந்தநிலையில் இன்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் இருவரும் பார்வையாளர்களாக கலந்து கொண்டிருந்தனர்.
Loading...