ஜனாதிபதியின் அதிகாரத்தை கோரவில்லை: வெளியானது போலி அறிக்கையாம்!

சபாநாயகர் கரு ஜயசூரியவால் பிரதம நீதியரசருக்கு நேற்றைய தினம் அனுப்பப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ள கடிதம் பொய்யான ஒன்றென சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

புதிய பிரதமர் மற்றும் அரசாங்கத்தை அமைப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுக்காததை சுட்டிக்காட்டி, அரசமைப்பின் 37.2 சரத்துக்கமைய பிரதம நீதியரசரின் அனுமதியுடன் ஜனாதிபதிக்கு இருக்கும் அதிகாரங்கள், முப்படைகளினதும் கட்டளைத் தளபதி பொறுப்பு தனக்கு கிடைக்க வேண்டுமெனத் தெரிவித்து பிரதம நீதியரசர் சுனில் பெரேராவுக்கு சபாநாயகரால் அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படும் கடிதம் ஒன்று சமூகவலைத்தளங்களில் நேற்று வெளியானது.

இதையடுத்து, சபாநாயகருக்கு அப்படியொரு அதிகாரம் இருக்கிறதா, இல்லையா என்ற ஆய்வில் நேற்று முழுவதும் ஊடகங்கள், சமூக வலைத்தளங்களில் விவாதங்கள் நடந்து வந்தன.

இந்த நிலையிலேயே, சபாநாயகர் அலுவலகம் இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.

சபாநாயகர் அலுவலகத்தின் அறிக்கையில், நேற்று வெளியான அறிக்கை போலியானதென குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here