நாடாளுமன்ற தெரிவுக்குழுவிலும் சண்டை!

நாடாளுமன்ற தெரிவுக் குழுவுக்கான உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பாக ஐக்கிய தேசிய கட்சி இன்று கூடி தீர்மானம் எடுக்கவுள்ளது.
இன்று முற்பகல் அலரி மாளிகையில் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கூட்டம் இடம்பெறும்.

இதேவேளை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பினர் நேற்று செவ்வாய்க்கிழமை பிரதமர் அலுவலகத்தில் மகிந்த ராஜபக்‌ஷ தலைமையில் கூடி இது தொடர்பாக தீர்மானம் எடுத்துள்ளனர்.

எவ்வாறாயினும் இந்த விடயத்தில் உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பாக இரண்டு தரப்பினருக்கும் இடையே முறுகல் நிலைமை ஏற்பட்டுள்ளது. தெரிவுக் குழுவுக்கு பெரும்பான்மையான உறுப்பினர்கள் ஆளும் தரப்பிலிருந்தே நியமிக்கப்பட வேண்டும் என மகிந்த அணியினர் கோரிக்கை விடுக்கின்றனர்.

எனினும் அரசாங்கம் தற்போது கிடையாது என்பதனால் அவ்வாறாக ஆளும் தரப்பென கூறி யாரையும் நியமிக்க முடியாது என ஐக்கிய தேசிய கட்சியினர் அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here