கனடாவில் இருக்கும் யாழ்ப்பாணத்தவர்களின் எண்ணிக்கையை வெளிப்படுத்திய விக்னேஸ்வரன்!

யாழ்ப்பாணக் குடாநாட்டில் கனேடியத் துணைத் தூதரகத்தை ஆரம்பிக்குமாறு வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் நீண்டகாலமாக விடுத்துவந்த கோரிக்கையை கனேடிய தூதரகம் நிராகரித்துள்ளது.

தற்போது கூறப்படுவதை போல மூன்று இலட்சத்திற்கும் அதிகமான வடக்கை சேர்ந்தவர்கள் கனடாவில் வாழவில்லையென்றும், இதில் பாதியளவானவர்களே கனடாவில் வாழ்வதாகவும் கூறியே விக்னேஸ்வரனின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்டவர்கள், கனடாவில் வசித்து வருகின்றனர். அவர்களது நன்மை கருதியும் வடக்கு மாகாணத்தில் வாழும் அவர்களது உறவுகளின் நன்மை கருதியும், யாழ்ப்பாணத்தில் கனேடியத் துணை தூதரகத்தை அமைக்க வேண்டுமென, முன்னாள் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன், நீண்டகாலமாக எழுத்து மூலம் கோரிக்கை விடுத்து வந்தார்.

இதையடுத்து, கனேடிய தூதரகத்தால் விவரங்கள் சேகரிக்கப்பட்டன. அந்த விபரங்களின்படி வடக்கு மாகாண மக்களில் 1 இலட்சத்து 50 ஆயிரம் பேர் மட்டுமே கனடாவில் வாழ்வதாகவும், 3 இலட்சம் தமிழர்கள் வசிப்பதாக வழங்கப்பட்ட தகவல் தவறானதென்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் யாழ்ப்பாணக் குடாநாட்டில், தற்போது இந்தியத் துணை தூதரகம் உள்ளதை போன்று, கனடா மற்றும் பிரித்தானியா போன்ற நாடுகளுக்கான துணை தூதரகங்களும் சுவிற்ஸர்லாந்து நாட்டுக்கான துணைத் தூதரகமும் அமையப்பெற்றால், அந்த நாடுகளில் வாழும் வடக்கு மாகாண மக்களுக்கும் வடக்கில் வாழும் அவர்களது உறவுகளுக்கும் நெருங்கிய உறவைப் பேணமுடியுமென முன்னாள் முதலமைச்சரால் வலியுறுத்தப்பட்டது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here