இரணைமடு வான்கதவுகள் திறக்கப்படாது!

தற்போது மழை வீழ்ச்சி குறைந்து காணப்படுவதால் இரணைமடு குளத்தின் நீரேந்தும் பகுதிகளில் இருந்து வரும் மழை நீர் குறைந்து வருவதனால் வான் கதவுகள் திறக்கப்படமாட்டாது என எந்திரி சுதாகரன் தெரிவித்துள்ளார்.

இரணைமடு குளத்தினை தொடர்ந்து கண்காணிப்புகள் இடம்பெற்று வருவதாகவும் குளத்தில் நீர் 32.11 அடி இருப்பதனால் 36 அடி வரைக்கும் சேமிக்க முடியும் என்ற காரணத்தால் வான் கதவுகள் திறப்பதற்கு அவசியமில்லை என்றும் எந்திரி சுதாகரன் தெரிவித்துள்ளார்.

வானிலையில் தாழமுக்கம் எதுவும் ஏற்பட்டால் குளத்தின் நீர் உயர்ந்து 36 அடி வந்தால் வான் கதவுகள் திறக்கப்படும் என எந்திரி சுதாகரன் தெரிவித்துள்ளார்.

இரணைமடு குளத்தின் வான் கதவுகள் திறக்கப்பட போகிறது என வதந்திகளை நம்பவேண்டாம் எனவும் அவர் கூறிப்பிட்டுள்ளார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here