போதையில் 5 வயது மகனை கடித்துக் குதறிய தந்தை!

தந்தையால் கடிக்கப்பட்டு காயங்களிற்கு இலக்கான 5 வயது சிறுவன் தெல்லிப்பழை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளான். போதை தலைக்கேறிய நிலையிலேயே தந்தை இந்த பாதகச் செயலை புரிந்துள்ளார்.

யாழ்ப்பாணம் இணுவிலில் இந்த சம்பவம் இடம்பெற்றது. சிறுவனின் கை, முதுகு, முகம் உள்ளிட்ட பல இடங்களிலும் கடி காயங்கள் ஏற்பட்டுள்ளன.

சிறுவனின் தந்தையை கைது செய்து சுன்னாகம் பொலிசார் நடத்திய விசாரணையில், போதையில் அவர் இதனை செய்தது தெரிய வந்தது. தற்போது அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இன்று அவர் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here