சேதம் விளைவித்த பொதுச்சொத்துக்களுக்கு அபராதம் செலுத்த வேண்டும்: நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வலியுறுத்தல்!

நாடாளுமன்ற சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த உறுப்பினர்கள் நட்டஈடு வழங்க வேண்டியது கட்டாமமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

அத்தோடு சேதமடைந்த சொத்துக்கள் தொடர்பில் ஆராய விசேட குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.

குறித்த குழுவை பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி நியமித்து பணிகளை ஆரம்பிக்க உத்திரவிட்டுள்ளார்.

கடந்த ஒன்பதாம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தைக் கலைத்து வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டதுடன், ஜனவரி ஐந்தாம் திகதி பொதுத் தேர்தலை நடத்துமாறும் அறிவுறுத்தியிருந்தார்.

இதற்கு எதிராக ஐக்கிய தேசிய முன்னணி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடந்த 12ஆம் திகதி உயர் நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்தன.

இந்த மனுவை விசாரித்த மூன்று நீதியரசர்கள் கொண்ட அமர்வு, நாடாளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தலுக்கு அறிவித்த ஜனாதிபதியின் வர்த்தமானிக்கு டிசம்பர் 7ஆம் திகதி வரையில் இடைக்கால தடையுத்தரவினைப் பிறப்பித்தது.

இடைக்கால தடையுத்தரவினைத் தொடர்ந்து, மறுநாள் 14 ஆம் திகதி நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பமாயின. இதன்போது பிரதமர் மஹிந்த மற்றும் அவரது அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டு வாய்மொழி மூலம் நிறைவேற்றப்பட்டது.

இதன்போது, அங்கு குழப்பம் ஏற்பட்டதால் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது. அதனையடுத்து 15, 16ஆம் திகதிகளில் தொடர்ச்சியாக நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வுகள் பெரும் அமளி ஏற்பட்டடு நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.

இவ்வாறு தொடர்ச்சியாக இடம்பெற்ற அமளிகள் மற்றும் கைக்லப்புக்களின் போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் கோபங்களுக்கு ஆயதமாக நாடாளுமன்ற பொருட்களை பயன்படுத்தி பொதுச்சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தனர்.

குறித்த தகாத நடவடிக்கையை கண்டித்தும் பொதுச்சொத்துக்கள சேதப்படுத்தியதை கண்டித்தும் பிரதி சபாநாயகர் மேற்படி முடிவை எடுத்துள்ளார்.

 

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here