கள்ளக்காதல் விவகாரம்: காளி சிலையின் முன் குத்திக் கொல்லப்பட்ட பெண்!

ஆலயம் ஒன்றில் காளி சிலைக்கு முன்னால் இரண்டு பிள்ளைகளின் தாயான இளம் குடும்பப் பெண்ணொருவர் குத்திக் கொல்லப்பட்டுள்ளார். களனிமுல்ல பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றது. உடைந்த கண்ணாடி போத்தலாலேயே அவர் குத்தி கொல்லப்பட்டுள்ளார்.

ஹங்வெல்ல – பஹத்கம பிரதேசத்தை சேர்ந்த 34 வயதான கொலை சந்தேகநபரையும் பொலிசார் கைது செய்துள்ளனர். கொல்லப்பட்ட பெண்ணின் கள்ளக்காதலரே இவ்வாறு கைதாகியுள்ளார்.

கொலை செய்யப்பட்டுள்ளவர் கிரிந்திவெல – பெபிலிவல பகுதியை சேர்ந்த 42 வயதான பெண் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பெண் கிராம சேவகர் ஒருவரை திருமணம் செய்துள்ள நிலையில், சில காலங்களுக்கு பின்னர் கிராம சேவகர் அவரிடமிருந்து விலகி வேறு ஒரு திருமணம் செய்துக்கொண்டுள்ளார்.

பின்னர் கொலை செய்யப்பட்டுள்ள பெண்ணுக்கும் சந்தே நபருக்கும் இடையில் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது.

இவர்கள் இருவரும் நீண்ட காலமாக கணவன் மனைவியாக வாழ்ந்து வந்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

சம்பவம் இடம்பெற்ற அன்று இருவரும் விடுதியொன்றுக்கு சென்று பின்னர் ஆலயத்திற்கு சென்ற வேளையே இந்த குற்றச்செயல் இடம்பெற்றுள்ளது.

கொலைக்கு பின்னர் சடலத்தை நீர் நிறைந்த குழியொன்றில் மூழ்கடித்துள்ளமையும் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மிரிஹான குற்றத்தடுப்பு பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here