ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டும்: மாபெரும் ஆர்ப்பாட்டத்திற்கு தயாராகிறது ஐ.தே.க!

நாட்டில் ஜனநாயகத்தினை பாதுகாக்குமாறு வலியுறுத்தி கண்டியில் எதிர்வரும் 24 ஆம் திகதி ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்கப் போவதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.

கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் ஊடகங்களிடம் இன்று இதனை தெரிவித்துள்ளார்.

இன்று முற்பகல் கட்சித் தலைவரான ரணில் விக்ரமசிங்க தலைமையில் அலரி மாளிகையில் நடைபெற்ற கட்சி தலைவர்களுடனான கூட்டத்தின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறியுள்ளார்.

சூழ்ச்சி அரசை வீட்டுக்கு விரட்டி அடித்து – நல்லாட்சியை பாதுகாத்துக்கொள்ளும் நடவடிக்கையின் ஓர் அங்கமாகவே இந்த அறவழிப் போராட்டம் கண்டியில் நடத்தப்படவுள்ளதென்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here