அனைத்து படைப்புக்களும் நோக்கம் கொண்டவை: இலங்கை ஜனாதிபதி!

பிரபஞ்சத்தின் அனைத்து படைப்புக்களும் குறித்தவொரு நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக படைக்கப்பட்டவை என்றும், மனிதர்கள் அனைவரும் சமமானவர்கள் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

உலகவாழ் இஸ்லாமிய மக்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) நபிகள் பிறந்ததினமான மீலாதுன் நபி விழாவை கொண்டாடி வருகின்றனர். அதனை முன்னிட்டு ஜனாதிபதி விடுத்துள்ள டுவிட்டர் பதிவில் மேற்படி தெரிவித்துள்ளார்.

குறித்த வாழ்த்து செய்தியில் மேலும் தெரிவித்துள்ள மைத்திரிபால சிறிசேன, பெண் பிள்ளைகளே சாபம் எனக் கருதி சிசுவாகவே உயிருடன் புதைக்கப்பட்ட வரலாறு கொண்ட இந்த உலகில், நபி அவர்களே அந்த யுகத்தை முடிவுறுத்தி பெண்களின் வாழ்வை உறுதிப்படுத்தினார் என்றும் கூறியுள்ளார்.

மேலும், நபி அவர்கள் தனது வாழ்வை அடிமைப்படுத்தப்பட்ட சமூகத்திற்காக அர்ப்பணித்தவர் என்றும், அனைத்து உயிர்கள் மீதும் அன்பு காட்ட வேண்டும் என்பதை வலியுறுத்தியவர் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்தோடு மனிதர்கள் அனைவரும் சமம் என்றும், பிரிவினைகளும் குரோதங்களும் அதிகரித்து காணப்படுகின்ற நிலையில், நபிகளின் போதனைகள் அனைவருக்கும் முன்மாதிரியாக அமையும் என்றும் ஜனாதிபதி தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here