யாழில் பாதுகாப்பற்ற கடவையில் காரை பந்தாடிய புகையிரதம்!

காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கி இன்று (20) நண்பகல் பயணித்த புகையிரதம் கந்தர்மடம், இந்து மகளிர் வீதியில் பாதுகாப்பற்ற புகையிரத கடவையில் கடக்க முற்பட்ட காரை மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் காரில் பயணித்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

கந்தர்மடம், இந்து மகளிர் வீதியில் காரில் பயணித்த குறித்த வர்த்தகர், பாதுகாப்பற்ற புகையிரத கடவையை இன்று நண்பகல் கடக்க முற்பட்டுள்ளார். அப்போது எதிரே வந்த புகையிரதம் காரை மோதி கந்தர்மடம் அரசடி வீதி வரை இழுத்துச் சென்றுள்ளது.

இந்த சம்பவத்தில் கார் முற்று முழுதாக சேதமடைந்ததுடன் காரில் பயணித்த யாழ். வர்த்தகரான பாலா என்பவர் தலையில் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here