தமிழகத்தோடு நாம் உள்ளோம்: கேரளா முதல்வர்!

கஜா புயலினால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக மக்களுக்கு உதவ கேரளா அரசு தயாராகவுள்ளது என அம் மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.

இன்று அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் மேற்படி தமிழகத்தோடு தாம் இருப்பதாக நம்பிக்கை கொடுத்துள்ளார்.

அத்தோடு பாதிக்கப்பட்ட திருவனூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களுக்கு குடிநீர்,  மெழுகுவர்த்திகள், உலர்ந்த உணவு பொருட்கள் மற்றும் புதிய ஆடைகள் ஆகியவை  வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

மேலும்,கேரள மாநில அனர்த்த முகாமைத்துவ அதிகாரசபை இதனை ஒழுங்கு செய்யும் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அண்மையில் கேரளா வரலாறு காணாத வெள்ளத்தினால் பெரும் அழிவுகளை எதிர்நோக்கியிருந்தது.

குறித்த வெள்ளப்பாதிப்பிலிருந்து இன்னும் மீளமுடியாமல் தொழிலையும் வாழ்வாதாரத்தையும் இழந்து மீண்டும் ஆரம்பத்திலிருந்து வாழ்க்கையை ஆரம்பிக்கும் மக்களாக கேரளாவின் பல்வேறு பகுதி மக்கள் காணப்படுகின்றனர்.

இந்நிலையில் இவ்வாறு போதிக்கப்பட்ம கேரளா மக்களுக்கு தமிழ்நாட்டிலிருந்து அதிக உதவிகள் கிடைக்கப்பெற்றன.

அந்த வகையில் தற்போது தமிழகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அம் மக்களுக்கு உதவ தமிழக அரசு முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here