ஆரவ் உடன் கடற்கரையில் ஓவியா கும்மாளம்!

ஆரவ்- ஓவியா இருவரும் கடற்கரையில் எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் அனைவராலும் ரசிக்கப்பட்ட நபரான ஓவியா, காதல் வயப்பட்டு ஏமாற்றம் அடைந்ததால் போட்டியைவிட்டு வெளியேறி ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார். பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மனதை வென்ற ஓவியா, நிகழ்ச்சியைவிட்டு வெளியேறிய பின்னர் மக்களிடம் பேராதரவு கிடைத்தது. ஓவியாவுக்கென இளைஞர்கள் தனி ஆர்மியை உருவாக்கி கொண்டாடி மகிழ்ந்தனர்.

இதைத்தொடர்ந்து அவ்வப்போது ஓவியா – ஆரவ் சந்தித்துக்கொள்ளும் புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி வந்தன. தாய்லாந்தின் பாங்காக் நகரில் ஆரவ் மற்றும் ஓவியா கைகோர்த்தபடி செல்லும் புகைப்படங்கள் வெளியாகி இருந்தன. அதுமட்டுமின்றி ஆரவ்வின் பிறந்த நாள் கொண்டாட்டத்திலும் நடிகை ஓவியா கலந்து கொண்டிருந்தார்.

தற்போது ஆரவ்வுடன் ஓவியா எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படத்தை நடிகர் ஆரவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அந்த பதிவில், ‘ரசிகர்கள் கேட்டுக் கொண்டதற்காக இந்த செல்ஃபியை எடுத்தேன். ஹெலு மற்றும் என்னுடன் சூப்பர்மேனும் இருக்கிறார்’ என்று குறிப்பிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here