மன்னாரில் விடுதலைப்புலிகளின் கண்ணிவெடிகளை அகற்றிய இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர்கள்!

இலங்கைக்கு சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணியினர் நேற்று (19) மன்னார் மாவட்டம் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பெரிய மடு பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

ஜோ ரூட் உட்பட வீரர்கள் பலர் இங்கு விஜயம் செய்திருந்தனர்.

மன்னார், பெரிய மடு காட்டு பகுதியில் பகுதியில் விடுதலைப் புலிகளால் அமைக்கப்பட்டிருந்த பலமான முன்னரணில் பெருமளவு நிலக்கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டுள்ளன.  இங்கிலாந்து அரசின் நிதி உதவியுடன் “மெக்“ கண்ணிவெடி அகற்றும் அரச சார்பற்ற அமைப்பு அங்கு கண்ணிவெடிகளை அகற்றி வருகிறது. கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளை நேரடியாக பார்வையிடவே இங்கிலாந்து அணியினர் அப்பகுதிக்கு சென்றிருந்தனர்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தவைர் ஜோ ரூட் மற்றும் வீரர்களான ஜேம்ஸ் டொரி, கீடன் ஜெனிக்ஸ், ஜொனி பெயார்ஸ்டோ, ஒலிஸ்டோன் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள், அணி முகாமையாளர்கள் ஆகியோர் விஜயத்தை மேற்கொண்டு கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளை நேரடியாக பார்வையிட்டனர்.

இங்கிலாந்து அணி வீரர்களை பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அலுவலகம் மன்னாருக்கு அழைத்து வந்திருந்தது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here