வரவு செலவு திட்ட உரையின் போது ஆபாசப்படம் பார்த்த மஹிந்த அணி: மேல்மாகாணசபையில் சம்பவம்!

மேல்மாகாணசபையின் நேற்றைய அமர்வின் போது, சபா மண்டபத்திற்குள் இருந்தபடி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் ஆபாசப்படம் பார்த்துள்ளனர். ஏற்கனவே இலங்கை அரசியல் சர்ச்சைகளால் நிரம்பி வழியும் நிலையில், ஆபாசப்பட சர்ச்சையும் இப்பொழுது புதிதாக இணைந்துள்ளது.

பத்தமுல்லவில் அமைந்துள்ள மேல்மாகாணசபையின் புதிய சபா மண்டபத்தில் 2019ம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் நேற்று முதலமைச்சர் இசுரு தேவப்பிரியாவால் சமர்ப்பிக்கப்பட்டது.

முதலமைச்சர் வரவு செலவுத் திட்ட உரையை நிகழ்த்திக் கொண்டிருந்தபோது, ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி உறுப்பினர்கள் சிலர் தமது இருக்கையில் உட்கார்ந்திருந்தபடி ஆபாசப்படம் பார்த்துக் கொண்டிருந்தனர். சபையில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்கள் இதை புகைப்படம் எடுத்தனர்.

மேல்மாகாணசபையின் புதிய சபா மண்டபத்தில் ஒவ்வொரு உறுப்பினரின் மேசையிலும் கணினி வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. அந்த கணினிகளிலேயே உறுப்பினர்கள் சிலர் ஆபாசப்படங்களை பார்த்தனர். இதில் வயதான மாகாணசபை உறுப்பினர் ஒருவரும் அடக்கம்.

இந்த புகைப்படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here