கஜா புயல் நிவாரணத்திற்கு உடனடியாக ரூ.1000 கோடி விடுவிப்பு: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

கஜா புயல் நிவாரண பணிகளுக்காக உடனடியாக ரூ.1000 கோடி விடுவித்து, முதல்வர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தமிழகத்தைத் தாக்கியா கஜா புயலானது டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் கடுமையான சேதத்தினை உண்டாகியுள்ளது. உயிர் சேதங்களை விடவும் கடுமையான பொருள் சேதம் ஏற்பட்டுள்ளது. லட்சக்கணக்கான தென்னை மற்றும் வாழை மரங்கள் முற்றிலும் அழிந்து விட்டன.

இந்நிலையில் கஜா புயல் நிவாரண பணிகளுக்காக உடனடியாக ரூ.1000 கோடி விடுவித்து, முதல்வர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் பிறப்பித்த உத்தரவின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

கஜா புயல் நிவாரண பணிகளுக்காக உடனடியாக ரூ.1000 கோடி விடுவித்து உத்தரவிடப்படுகிறது.

கஜா புயல் பாதிப்பால் உயிரிழந்தவர்களுக்கு ஏற்கனவே ரூ.10 லட்சம் நிவாரணமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கடுமையாக காயமடைந்தவர்களுக்கு ரூ..1 லட்சமும், சிறிய அளவில் காயமடைந்தவர்களுக்கு ரூ.25 ஆயிரமும் நிவாரணமாக வழங்கப்படும்.

முழுமையாக சேதமடைந்த குடிசைகளுக்கு ரூ. 10 ஆயிரம் நிவாரணம். பகுதியளவு சேதமடைந்த குடிசைகளுக்கு ரூ.4100 நிவாரணம். முழுமையாக குடிசைகளை இழந்தவர்களில் தகுதி வாய்ந்தோருக்கு புதிய வீடு கட்ட உதவி.

தென்னை விவசாயிகளுக்கான உதவிகளில் 175 மரங்களைக் கொண்ட ஒரு ஹெக்டேர் தென்னை வயல் சேதமடைந்தவர்களுக்கு, ஹெக்டேருக்கு ரூ.1,92,500 நிவாரணம். அதே சமயம் மறு சாகுபடி பணிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.72100 நிவாரணம்.

சொட்டுநீர் பாசனம் செய்வோருக்கு 100% முழுமையாக மானியமும், மற்ற விவசாயிகளுக்கு 20% மானியமும் வழங்கப்படவுள்ளது.

நிவாரண முகாம்களில் உள்ளவர்களுக்கு கூடுதலாக ஒரு வேஷ்டி, ஒரு சேலை மற்றும் 4 லிட்டர் மண்ணெண்ணெய் வழங்கப்பட உள்ளது.

அதேபோல பாதிக்கப்பட்ட மீனவர் குடும்பங்களுக்கு தலா ரூ.5000 வழங்கப்பட்ட உள்ளது.

பாதிக்கப்பட்டோருக்கு ஆவின் நிறுவனம் மூலமாக பால் வழங்க ஏற்பாடு செய்யப்படும்.

மின்சார பாதிப்புகளை சரிசெய்யும் பணிகளுக்கு மின்சார வாரியத்திற்கு உடனடியாக ரூ.200 கோடி வழங்கப்படும்.

இதேபோல புயலால் உயிரிழந்த கால்நடைகளுக்கும் தனித்தனியாக மானியம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோல விரிவான பல்வேறு நிவாரண உதவிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here