கூடிய மூன்று நிமிடத்தில் ஒத்திவைக்கப்பட்டது நாடாளுமன்றம்!

ஏற்கனவே குறிப்பிட்டதற்கு இணங்க இன்று நண்பகல் 1.30க்கு கூடிய நாடாளுமன்றம் மூன்று நிமிடங்களிளேயே ஒத்திவைக்கப்பட்டது.

நாடாளுமன்றம் பல்வேறு சிக்கலான சூழ்நிலைக்கு மத்தியில் சற்று முன்னர் நான்காவது முறையாகவும் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் கூடியது.

அமர்வு ஆரம்பமானதன் பின்னர் 23 ஆம் திகதி காலை 10 மணி வரை நாடாளுமன்றத்தை ஒத்தி வைப்பதாக பிரதி சபாநாயகர் அறிவித்தார்.

நாடாளுமன்றம் இன்று கூடியதன் பின்னர் மீண்டும் ஒத்தி வைப்பதற்கு கட்சித் தலைவர்கள் கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்னர் தெரிவித்திருந்தார்.

 

 

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here