கடந்த மே மாதம் 9ஆம் திகதி இடம்பெற்ற பல்வேறு வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடைய 2,423 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு 856 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
நேற்றைய தினம் 30 பேர் கைது செய்யப்பட்டதாகவும், குழுவைச் சேர்ந்த 14 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
அதன்படி, மே மாதம் 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறை மற்றும் அமைதியின்மை தொடர்பில் தற்போது 1069 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் 30 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று 726 சாட்சி வாக்குமூலங்கள் பொலிஸாரால் பதிவு செய்யப்பட்டதாக சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் தல்துவா தெரிவித்தார்.