யோகா செய்த அமெரிக்க முருக பக்தர்கள்!

பழநி முருகன் கோயிலுக்கு வந்த அமெரிக்கா பக்தர்கள், ‘யோகா’ செய்வதன் அவசியத்தை வலியுறுத்தி அதனை செய்து காண்பித்தனர்.

கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு, பழநி முருகன் கோயிலுக்கு நேற்று அமெரிக்காவைச் சேர்ந்த ‘ஸ்கந்த யோகா’ நிறுவன பயிற்றுனர்கள் எட்டுபேர் வந்தனர். திருஆவினன்குடியில் குழந்தை வேலாயுத சுவாமிக்கும், மலைக்கோயிலில் முருகருக்கும் பாலாபிேஷகம் செய்து வழிபட்டனர்.அவர்கள் இடும்பன் மலைக்கோயிலில் யோகாசனப் பயிற்சி செய்தனர். பக்தர்கள் கேட்டுக்கொண்டதால் போகர் சித்தர் சன்னதி அருகே யோகா ஆசிரியர் ஆனந்த் பல்வேறு தனிநபர் யோகாசனம் செய்து காண்பித்தார்.

புதுச்சேரியைச் சேர்ந்த கைடு ஆனந்த் கூறுகையில், ‘அமெரிக்கா மியாமி புளோரிடாவில் ஸ்கந்த யோகா நிறுவனம் நடத்தி வருகின்றனர். தீவிர முருகபக்தர்கள் என்பதால் அவர்கள் பெயரை தமிழில் மாற்றியுள்ளனர். தமிழகத்தில் முக்கிய கோயில்களுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்கின்றனர். யோகா கலையை மிகவும் விரும்பி செய்கின்றனர்.” என்றார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here