எழுக தமிழிற்கு வந்த கூட்டத்தை விட எனது வரவேற்பிற்கு வந்தவர்கள் அதிகம்: டக்ளஸ்!

“உருத்திராட்சம் போட்டவர்கள் இப்போது போலி தேசியம் பேசி மக்களை மயக்கி வருகின்றனர். மக்கள் இவர்கள் தொடர்பில் விழிப்பாக இருக்க வேண்டும்.
தமிழ் மக்கள் பேரவையினர் வீரசிங்கம் மண்டபத்தில் கூட்டம் போட்டால் பார்வைக்கு கூட்டம் குறைவாக இருக்கும் என்பதால், நல்லூரில் உள்ள சிறிய மண்டபம் ஒன்றில் கொஞ்ச கூட்டத்தை அழைத்து அதிகமானோர் வந்தனர் என காட்டினார். அவர்கள் நடத்திய எழுக தமிழ் பேரணியில் கலந்துகொண்டவர்களை விட எனது வரவேற்பு நிகழ்வில் அதிகமானவர்கள் கலந்து கொண்டனர்“

இவ்வாறு தெரிவித்துள்ளார் ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா.

யாழ். நகரிலுள்ளள்ள ஈழமக்கள் ஐனநாயகக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று மதியம் அவர் நடத்திய ஊடகவியியலாளர் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அச் சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்..

“தமிழ்த் தலைமைகள் கிடைத்த சந்தர்ப்பங்களையெல்லாம் தவறவிட்டு விட்டார்கள். தேர்தல் காலங்களில் உசுப்பேத்து வார்த்தைகளை கூறி வந்தவர்கள் மக்களுக்கு கிடைக்க வேண்டியவற்றை பெற்றுக் கொடுக்கவில்லை. இதற்கு அப்பால் உருத்திராட்சம் போட்டவர்கள் இப்போது போலி தேசியம் பேசி மக்களை மயக்கி வருகின்றனர். மக்கள் இவர்கள் தொடர்பில் விழிப்பாக இருக்க வேண்டும்.
தமிழ் மக்கள் பேரவையினர் வீரசிங்கம் மண்டபத்தில் கூட்டம் போட்டால் பார்வைக்கு கூட்டம் குறைவாக இருக்கும் என்பதால், நல்லூரில் உள்ள சிறிய மண்டபம் ஒன்றில் கொஞ்ச கூட்டத்தை அழைத்து அதிகமானோர் வந்தனர் என காட்டினார்.

அவர்கள் நடத்திய எழுக தமிழ் பேரணியில் கலந்துகொண்டவர்களை விட எனது வரவேற்பு நிகழ்வில் அதிகாமானவர்கள் கலந்து கொண்டனர்.

கள்ள வாக்குகளை பெற்று எம்.பியான கஜேந்திரன், வாகனங்களை விற்று மணல் தரையில் வீடு வாங்கி விட்டு 40 ஆயிரம் சவப்பெட்டிகளை தயாராக வைத்திருங்கள் என உசுப்பேத்தி விட்டு நாட்டை விட்டு தப்பி ஓடினார்.

பின்னர் தனது சகோதரனை காப்பாற்ற முன்னாள் அரசுடன் பல டீல் போடடார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைப்பேன், பதுங்கி இருக்கும் நபர்களை காட்டிக்கொடுப்பேன் என கூறியே இங்கு வந்தார். எனவே இவர்கள் தொடர்பில் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும்.

மக்கள் ஆணை கிடைக்க வேண்டும் என்றே நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது சரியா? பிழையா? என்பதற்கு அப்பால் உடனடியாக தேர்தல் ஒன்று நடத்தப்பட்டு மக்கள் சரியானவர்களை தெரிவு செய்ய வேண்டிய தேவை உள்ளது. இனிவரும் தேர்தலில் வீணை சின்னத்தில் போட்டியிடவே தீர்மானித்துள்ளோம். அதற்கமைய சில கட்சிகளும் எம்முடன் இணைந்து கொள்வதற்கான பேச்சுக்களை நடத்தியிருக்கின்றன.

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இப்போது பழையபடி, அரசாங்கம் ஏமாற்றிவிட்டதாக முணுமுணுக்க தொடங்கியுள்ளனர். இந்த அரசாங்கம் அமைந்து இதுவரையும் அரசியல் தீர்வு முயற்சியில் என்ன செய்தார்கள்? அரசியலமைப்பு உருவாக்கத்தில் ஈடுபட்டு வரும் ஓரிரண்டு பேரும், ஐதேகவின் ஏஜெண்டுகளாகவே இயங்குகிறார்கள். கொமிசனிற்காக இயங்கும் தரகர்களாகத்தான் செயற்பட்டு வருகிறார்கள். அதனால்தான் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதும் பதைபதைத்து போய், நீதிமன்றத்தை பற்றி கதைக்கிறார்கள்.

முன்னாள் வடக்கு மாகாண எதிர்கட்சி தலைவர் சி.தவராசாவை எனது அமைச்சின் ஆலோசகராக நியமித்துள்ளேன். அவரிடம் வடக்கு மாகாணம் சார்ந்த விடயங்களை கவனிக்க கொடுத்துள்ளேன். அதேபோன்று எமது கட்சியில் இருந்து பிரிந்து சென்ற சந்திரகுமாரையும் மீண்டும் இணைப்பது தொடர்பில் ஆராய்ந்து வருகின்றோம்“ என்றார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here