மைத்திரிக்கு எதிராக மன்னாரில் போராட்டம்!

பிரதமரை பதவி விலக்கியது, நாடாளுமன்றத்தை கலைத்தது போன்ற நடவடிக்கைகளிற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று மன்னாரில் எதிர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.

இன்று காலை 10 மணியளவில் மன்னார் மாவட்ட செயலகத்துக்கு முன்பாக இந்த கவனயீர்ப்பு பேரணி இடம்பெற்றது

மன்னார் மாவட்ட ஐக்கிய தேசிய கட்சியின் ஏற்பாட்டில் இடம் பெற்ற இந்த பேரணியில் ஐக்கிய தேசிய கட்சியின் முக்கியஸ்தர்கள், பொது மக்கள் என பலரும் கலந்த்து கொண்டனர்

மீண்டும் குடும்ப ஆட்சி வேண்டாம், ரணிலை ஜனாதிபதி ஆக்குவோம் சஜித்தை பிரதமராக்குவோம், மைத்திரியே உன் அரசியல் அதிரடி எல்லாம் ரத்திரியே, ஜனநாயக விரோத செயற்ப்பாடுகளை உடனே நிறுத்து என எழுதப்பட்ட பதாகைகளை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here