கடலில் மூழ்கிய பாடசாலை மாணனை காணவில்லை

திரு​கோணமலை கிண்ணிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிண்ணியா பாலத்துக்கு கீழ் மீன் பிடிக்கச் சென்ற பாடசாலை மாணவன் ஒருவர் கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.

பாடசாலை மாணவர்கள் மூவர் மீன் பிடிக்க சென்றபோதே, இந்த அனர்த்தம் இடம்பெற்றது. 19 வயதுடைய மாணவன் நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடலில் விழுந்த செருப்பை எடுக்க சென்ற மாணவன் நீந்தி கரையை கடக்க முற்பட்டபோது இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

கிண்ணியா பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் உயர்தரத்தில் கற்கும் குறித்த மாணவன், கிண்ணியா 01 பிரதேசத்தை சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து மாணவனை தேடும் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here