மன்னாரில் நீர்நிரம்பிய குழிக்குள் வீழ்ந்து சிறுவர்கள் இருவர் பலி!

மன்னார் தோட்டவெளி பிரதேசத்தில் நீர் நிரம்பிய குழிக்குள் வீழ்ந்து இரண்டு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். இன்று மாலை 4 மணியளவில் இந்த துயர சம்பவம் நடந்துள்ளது.

7,8 வயதுடைய சிறுவர்களே உயிரிழந்துள்ளனர்.

தோட்டவெளி பிரதேசத்திலுள்ள சதுப்பு நிலமொன்றில் இருந்த குழி, மழை வெள்ளத்தால் நிரம்பியிருந்தது. விளையாட சென்ற இந்த இரண்டு சிறுவர்களும் அதில் தவறி வீழ்ந்து உயிரிழந்தனர்.

திடீர் மரணவிசாரணை அதிகாரி சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை நடத்தியதையடுத்து, தற்போது சடலங்கள் மன்னார் பொது மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here