புது கட்சி பதிவு செய்தார் பொன்சேகா!

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா புதிய கட்சியொன்றை தேர்தல் செயலகத்தில் பதிவு செய்துள்ளார். நேற்று நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட நிலையில், அந்த அறிவிப்பிற்கு சில மணி நேரங்கள் முன்னதாக சரத் பொன்சேகாவின் பதிவு நடவடிக்கைகள் பூர்த்தியாகியுள்ளன.

இராணுவத்தளபதியாக பதவி வகித்த சரத் பொன்சேகா, பதவி விலகிய பின்னர் ஜனநாயக கட்சியென்ற பெயரில் கட்சி ஆரம்பித்தார்.

சில வருடங்களின் பின்னர், அண்மையில் ஐ.தே.கவில் இணைந்து கொண்டுள்ளார். இந்த நிலையில், புதிய கட்சியொன்றை தேர்தல்கள் செயலகத்தில் சரத் பொன்சேகா பதிவு செய்துள்ளார்.

தேர்தல் அறிவிக்கப்பட்டால், அதன்பின்னர் கட்சிகளை பதிவுசெய்ய முடியாது. அதேநேரம் கட்சிகளை பதிவுசெய்ய பல படிமுறைகள் உள்ளன. வடக்கிலும் பலர் கட்சிகளை பதிவுசெய்ய நீண்டகாலமாக காத்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் நேற்றைய தினம் சரத் பொன்சேகாவினால் சமர்ப்பிக்கப்பட்ட கட்சிக்கான ஆவணங்களை ஏற்றுக்கொண்ட தேர்தல் திணைக்களம், கட்சியை பதிவு செய்துள்ளது.

ஐ.தே.கவின் அங்கத்தவராகி விட்ட சரத் பொன்சேகா எதற்காக இன்னொரு கட்சியை பதிவு செய்தார் என்ற விபரத்தை அறிய முடியவில்லை.

ஜனாதிபதி நேற்றிரவு நாடாளுமன்றத்தை கலைத்தார். அதற்கு சில மணி நேரங்கள் முன்னதாக சரத் பொன்சேகாவின் கட்சி பதிவு செய்யப்பட்டது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here