மீண்டும் #metoo : ‘பேட்ட’ நடிகர் மீது உலக அழகி பகீர் குற்றச்சாட்டு!

சில வாரங்களான ஓய்ந்திருந்த #metoo சர்ச்சை மீண்டும் விஸ்பரூபமெடுத்துள்ளது. முன்னாள் உலக அழகியும், பாலிவுட் நடிகையுமான நிஹாரிகா சிங், ரஜினி நடித்துள்ள ‘பேட்ட’ பட நடிகரான நவாசுதீன் சித்திக் மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளார்.

#metoo  ஹாஷ்டேக்கின் மூலம், பெண்கள் தாங்கள் எதிர்கொண்ட பாலியல் அத்துமீறல்களை பெண்கள் துணிந்து வெளிப்படுத்தி வந்தனர். பாலிவுட்டில் நடிகர் நானா பட்டேகர் மீது தனுஸ்ரீ தத்தா பகிரங்கமாக குற்றம்சுமத்தியதை தொடர்ந்து, பல நடிகைகள் துணிந்து தமக்கு நேர்ந்த கொடுமைகளை அம்பலப்படுத்தினர். இதையடுத்து, சின்மயி மூலம் தென்னக சினிமாவிலும் மீ டூ புயல் அடித்தது.

இந்நிலையில், முன்னாள் உலக அழகியும், பாலிவுட் நடிகையுமான நிஹாரிகா சிங், பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக் மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளார்.

நவாசுதீன் ஒருமுறை தனக்கு போன் செய்து தனது வீட்டின் அருகே இருப்பதாக கூறினார். அவரை எனது வீட்டிற்கு பிரேக் ஃபாஸ்ட் சாப்பிட அழைத்தேன். அப்போது என்னிடம் தவறாக நடந்துக் கொள்ள முயற்சித்த நவாசுதீன், ஒரு உலக அழகியோ அல்லது நடிகையோ தனக்கு மனைவியாக வேண்டும் என்ற கனவு இருப்பதாக கூறினார். அவர் கூறியது வேடிக்கையாக இருந்தாலும் அந்த நேரத்தில் எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. பின் அவரிடம் இருந்து விலகிச் சென்றேன். பின்னர் சிறிது நாட்கள் கழித்து நேரடியாக தன்னுடன் இருக்க விரும்புவதாக கூறினார் அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

நிஹாரிகா சிங்- நவாசுதீன் சித்திக்

அவரது ஆசைக்கு மறுத்ததை வைத்துக் கொண்டு, தன்னை ஒரு மோசமான நடிகை என்று பல கட்டுக்கதைகளை கூறி தனது திரை வாழ்க்கைக்கு பெரும் முட்டுக்கட்டையை போட்டார் என நிஹாரிகா குற்றம்சாட்டியுள்ளார்.

நிஹாரிகாவிற்கு நேர்ந்த மீ டூ அனுபவத்தை அவரது சார்பாக பத்திரிகையாளர் சந்தியா மேனன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

நவாசுதீன் மட்டுமின்றி டெல்லியில் தற்கொலை செய்துக் கொண்ட விமான பணிப்பெண் அனிசியா பத்ராவின் கணவர் மயாங்க் சிங்வி, தயாரிப்பாளர் பூஷன் குமார் உள்ளிட்டோர் மீது நிஹாரிகா பாலியல் புகார் தெரிவித்துள்ளார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here