நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக ஜேவிபி நீதிமன்றம் செல்கிறது!

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக நீதிமன்றம் செல்லவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி கூறியுள்ளது.

இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அந்தக் கட்சியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க இதனைக் கூறியுள்ளார்.

ஜனாதிபதி ஆரம்பம் முதலே அரசியலமைப்பை மீறி வருவதாக அவர் கூறியுள்ளார்.

அந்தத் தேர்தலில் அவரது அரச அதிகாரத்தை உச்ச அளவில் பயன்படுத்தும் நோக்கிலேயே அமைச்சரவை செல்லுபடியாகும் என்று ஜனாதிபதி கூறியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அரசியலமைப்பில் ஜனாதிபதிக்கு வழங்கப்படாத அதிகாரத்தின் மூலம் பாராளுமன்றத்தை மைத்திரிபால சிறிசேன கலைத்துள்ளதாக, அவர் கூறியுள்ளார்.

இது முற்றாக அரசியலமைப்புக்கு விரோதமானது என்று அநுரகுமார திசாநாயக்க கூறியுள்ளார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here