தென் கலிஃபோர்னியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ: உயிரிழப்புக்கள் அதிகம்!

தென் கலிஃபோர்னியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ, மலிபுவில் உள்ள கடற்கரை விடுதி ஒன்றினை மொத்தமாக அடித்துச் சென்றுள்ளது.

இந்தத் தீயினால் கட்டடங்கள் எரிக்கப்பட்டு, குடியிருப்பு வாசிகள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

இப்பகுதிக்கு சற்று வடக்கே ஏற்பட்டுள்ள மற்றொரு காட்டுத்தீயானது, பேரடைஸ் நகரை மொத்தமாக அழித்துள்ளது. இதில் 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 35 பேரை காணவில்லை.

கலிஃபோர்னியாவில் மொத்தம் 3 பெரிய தீ பற்றிய சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

வடக்கில் கேம்ப் தீ, தெற்கில் வூஸ்லி தீ மற்றும் ஹில் தீ ஆகியவை கடுமையான காற்று வீசுவதால் வேகமாக பரவி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இப்பகுதிகளில் இருந்து இரண்டரை லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

அத்தோடு, தீ ஏற்படுத்தியுள்ள சேதம் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு உள்ளது” என கலிஃபோர்னியா கவர்னர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

 

இதேவேளை மத்திய லாஸ் ஏஞ்சல்ஸின் வட-மேற்கில் இருந்து 40 மைல்கள் தொலைவில் உள்ள ஆயிரம் ஓக் பகுதியில் இத்தீப்பிழம்பு கடந்த வியாழனன்று தொடங்கியது. மற்றொரு தீப்பிழம்பான ஹில் தீயும் இதே பகுதிக்கு அருகில் அதே நேரத்தில் ஆரம்பித்தது.

நேற்று வெள்ளிக்கிழமையன்று நெடுஞ்சாலை 101ஐ தாண்டி கடற்கரையை நோக்கி இத்தீ பரவத் தொடங்கியது. தற்போது 35,000 ஏக்கர் நிலப்பரப்பில் தீ பரவியுள்ளது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here