மைத்திரியின் செயற்பாடு மனவேதனையளிக்கிறது: கனடா!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை,  மிகவும் வருத்தமளிப்பதாக, கனேடிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

கனடாவின் வெளிவிவகார அமைச்சின் டுவிட்டர் பக்கத்தில், இன்று இத் தகவல் வெளியடப்பட்டுள்ளது.

இலங்கையின் நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான முடிவால், கனடா மிகவும் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

அத்தோடு, இந்த அரசியல் நிச்சயமற்ற தன்மை இலங்கையின் ஜனநாயக எதிர்காலத்திற்கு, நல்லிணக்கம் மற்றும் பொறுப்புணர்வு ஆகியவற்றின் மீதான அதன் கடப்பாடுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என, அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here