யாழ்ப்பாணத்தை சேர்ந்த மூன்று பல்கலைகழக மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

இரத்தினபுரி- பலாங்கொட, பான் குடா ஓயாவில் நீராடச் சென்ற மூன்று பல்கலைகழக மாணவர்கள் நீரில் மூழ்கி உயரிழந்துள்ளனர். சப்ரகமுவ பல்கலைகழகத்தில் கல்வி பயிலும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த பல்கலைகழக மாணவர்கள் மூவரே உயிரிழந்துள்ளனர்.

நீரில் மூழ்கிய மாணவர்களை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்த பின்னர் இன்று முற்பகல் 10.30 அளவில் அவர்கள் உயிரிழந்தனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் மூன்றாம் வருடத்தில் கல்வி பயிலும் இணுவில் பாலாவொடையை சேர்ந்த செல்வரட்ணம் திசான் (வயது 25), வட்டுக்கோட்டையைச் சேர்ந்த சரவணபவன் கோபிசன் (வயது 23), நல்லூரைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் சாரங்கன் (வயது 25) ஆகிய மூன்று மாணவர்களுமே உயிரிழந்தனர்.

உயிரிழந்த மாணவர்களின் சடலங்கள் பலாங்கொடை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

விடுமுறை தினமான இன்று ஆற்றில் குளிக்க சென்ற போதே இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here