அனைவரும் ஒன்றிணைவோம்: கனிமொழியின் அழைப்பு யாருக்கு?

தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு அவர்கள் முன்னெடுத்து வரும், பிஜேபி எதிர்ப்பு கூட்டணிக்கான முயற்சிகள், பிஜேபியை பதற்றம் கொள்ள வைத்துள்ளது என தி.மு.க.வின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் தி.மு.க. தலைவருக்கிடையில் சந்திப்பு இடம்பெற்றது. இதையடுத்து கனிமொழி இன்று வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் மேற்படி கூறியுள்ளார்.

அத்தோடு, இந்தியாவின் மதச்சார்பற்ற தன்மையை பாதுகாக்க வேண்டியது, காலத்தின் தேவை என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கூறியுள்ளதைப் போல, மதவாத பிஜேபியையும், ஊழல் அதிமுகவையும் தோற்கடித்தே தீர வேண்டும். அனைத்து அரசியல் கட்சிகளும், தங்களுக்குள் உள்ள வேறுபாடுகளை மறந்து ஒன்றிணைய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

பா.ஜ.க.வுடனான எதிர்ப்பை தொடர்ந்து ஆந்திரா முதல்வர் தற்போது பிரதமர் மோடியை எதிர்க்கும் ஏனைய காட்சிகளை நாடியுள்ளார்.

அந்தவகையில் அண்மையில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை சந்தித்து கூட்டணி அமைப்பது தொடர்பில் பேசியிரு்த அவர் நேற்றைய தினம் தி.மு.க. தலவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கூட்டணி தொடர்பில் ஆலோசித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here