இலங்கை ஜனாதிபதி சட்டவிரோதமாக செயற்படுகிறார்: இந்திய அரசு தலையிட வேண்டும் – மு.க.ஸ்டாலின்

இலங்கை தமிழர்கள் பாதுகாப்புடன் வாழ இந்திய மத்திய அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தி.ம.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்படி கூறியுள்ளார்.

இலங்கையின் நாடாளுமன்றம் இரவோடு இரவாக கலைக்கப்பட்டுள்ளமை ஜனநாயகத்தின் படுகொலை என்று தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அத்தோடு அரசியல் சட்டத்தை காலில் போட்டு மிதித்து அதன் மீது ஏறி நின்று, சிறிதும் மனச்சாட்சியின்றி நாடாளுமன்றை சிறிசேன கலைத்திருப்பது அதிர்ச்சியளிப்பதாக கூறியுள்ளார்.

இதன்மூலம் தமிழர்களின் வாழ்விற்கு சிறிசேன அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாகவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும் இலங்கையில் இடம்பெறும் ஜனநாயக விரோத செயல்களை தொடக்கம் முதலே கைகட்டி மத்திய அரசு வேடிக்கை பார்ப்பது கவலையளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

கண்ணிறடகு எட்டிய தூரத்தில் இடம்பெறும் அநியாயத்தை கண்டும் பிரதமர் ாடி அரசாங்கம் எதையும் கண்டுகொள்ளாமல் இருப்பது உலக தமிழர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாகவும் கூறியுள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here