ஜனாதிபதியின் செயலை கண்டித்து மன்னாரில் போராட்டம்!

அண்மைக்காலமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் செயற்பாடுக்ள ஜனநாயகத்திற்கு சட்டவிரோதமாக காணப்படுவதாக கூறி, மன்னாரில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்ட செயலகத்திற்கு முன்னாள் இன்று காலை 10 மணியளவில் இந்த போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்ட ஐக்கிய தேசிய கட்சியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த போராட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் வன்னி முகாமையாளர் ஜேம்ஸ் ப்ரிமிளஸ் மற்றும் மன்னார் மாவட்ட அமைப்பாளர் அப்துல் சமியு முஹமது பஸ்மி மற்றும் கட்சி முக்கியஸ்தர்கள் பொது மக்கள் என கலந்து கொண்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீண்டும் குடும்ப ஆட்சி வேண்டாம், ரணிலை ஜனாதிபதி ஆக்குவோம், சஜித்தை பிரதமராக்குவோம், மைத்திரியே உன் அரசியல் அதிரடி எல்லாம் இராத்திரியே, ஜனநாயக விரோத செயற்பாடுகளை உடனே நிறுத்து என, பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பல்வேறு பததைகளை ஏந்தியவாறு போரட்டத்தில் ஈடுபட்டனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here