‘சர்கார்’ பாணியில் இலவசங்களை உடைத்து துவம்சம் செய்யும் விஜய் வெறியர்கள்!

சர்கார் திரைப்படத்திற்கு ஆதரவு தருகிறோம் என்ற பெயரில் விஜய் ரசிகர்கள் வீட்டில் உள்ள இலவச பொருட்களை இளைஞர்கள் உடைத்து வருகின்றனர்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ‘சர்கார்’ திரைப்படம் கடும் சர்ச்சைகளைக் கடந்து தீபாவளிக்கு ரிலீசானது. இப்படத்தில் வில்லியாக நடித்துள்ள வரலட்சுமியின் கதாபாத்திரத்திற்கு வைக்கப்பட்ட கோமளவள்ளி என்ற பெயர், தமிழக அரசின் இலவச திட்டங்கள் குறித்து விமர்சிக்கப்பட்டிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக-வினர் போராட்டம் நடத்தினர். இதையடுத்து மறு தணிக்கை செய்யப்பட்ட இப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டு திரையிடப்பட்டது.

இந்நிலையில் சர்கார் திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த இலவச பொருட்களை தீயில் போட்டு கொளுத்தும் காட்சியை விஜய் ரசிகர்கள் பலர் டிக் டோக் ஆப்-பின் மூலம் செய்து வருகின்றனர். இதனால் வீட்டில் இருக்கும் இலவச பொருட்களை அவர்கள் உடைத்து வருகின்றனர். டிக் டோக் ஆப்பின் மூலம் இவர்கள் செய்யும் இந்த வீடியோ பதிவுகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இது மட்டுமல்லாமல் உச்சகட்டமாக விஜய் ரசிகர் ஒருவர் தனது வலைதள பக்கத்தில் தனது வீடே அரசு வழங்கிய வீடு தான், அதனால் விஜய் வழியில் அதை இடிக்க போகிறேன் என்று பதிவிட்டுள்ளார். இது விஜய் ரசிகர்கள் மத்தியில் தவறான புரிதலை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை காட்டும் விதமாக உள்ளதாக கருத்துக்கள் கூறப்பட்டு வருகிறது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here