இலங்கையின் செயல் கவலையளிக்கிறது: அமெரிக்கா!

இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை அரசியல் நிலமையை மேலும் மோசமடைய செய்துள்ளதென்றும், இத்தகைய செயல் மிகவும் கவலையளிப்பதாகவும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

குறித்த தகவலை அந்நாட்டு அரச ஊடகமொன்று உறுதி  செய்துள்ளது. அத்தோடு, இலங்கையின் உறுதியான பங்காளியாக அமெரிக்கா விளங்குவதாகவும், ஜனநாயகத்தின் உறுதிப்பாட்டை இலங்கை கடைப்பிடிக்க வவேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும், இலங்கை ஜனநாயகத்தை நிலைநாட்டும் வகையில் முடிவெடுக்குமட என நம்புவதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here