சர்கார் திரைப்படத்தில் நீக்கப்பட்ட காட்சிகள் இவைதான்!

விஜய் உடைய அரசியல் பிரவேசத்தை வலுப்படுத்த எடுக்கப்பட்ட சர்கார் படம் பல்வேறு சிக்கல்களை சந்திக்கிறது. ஏற்கனவே கதை திருட்டு விவகாரத்தில் சிக்கிய சர்கார், இப்போது சில காட்சிகளை நீக்கியுள்ளார்கள்.

கட்சிகள், அமைப்புக்கள் நடத்திய போராட்டங்களையடுத்து சில காட்சிகளை நீக்க தயாரிப்பு நிறுவனம் ஒத்துக்கொண்டது.

அவர் நீக்கிய காட்சிகள் இவை தான். ..

1. ஏழாம் ரீலில் இடம் பெறும் மிக்ஸி, கிரைண்டர் ஆகிய பொருட்களை தீயில் தூக்கி போடும் காட்சி!

2. ஏழு மற்றும் எட்டாவது ரீலில் இடம் பெறும் கோமளவல்லி என்ற பெயரில் இடம்பெறும் ‘கோமள’ என்ற வார்த்தை நீக்கம்!

3. நான்காவது ரீலில் வரும் ‘பொதுப்பணித்துறை’ என்ற வார்த்தை நீக்கம்!

4. ஏழாவது ரீலில் வரும் 56 வருஷம் என்ற வார்த்தை நீக்கம்!

இந்த மாற்றங்களுக்கு பிறகு இந்த படம் ஓடும் மொத்த நேரம் 2 மணி 44 நிமிடங்கள் 41 விநாடிகள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here