இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை தொடர்பில் இங்கிலாந்து கவலை!

இங்கிலாந்தின் வெளியுறவுத்துறை அமைச்சர் மார்க் ஃபீல்ட் (Mark Field), இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை தொடர்பில் கவலை வெளியிட்டுள்ளார்.

அவர் இன்று காலை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் மேற்படி தனது கவலையை தெரிவித்துள்ளார்.

அத்தோடு, இலங்கையின் ஒரு நண்பராக ஐக்கிய இராச்சியம் அரசியலமைப்பை நிலைநாட்டவும், ஜனநாயகத்தை பாதுகாக்கவும் அனைத்து கட்சிகளும் முன்வர வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.

நேற்று நள்ளிரவில் இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது. இதேவேளை அண்மையில் இரவோடு இரவாகவே மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக நியமிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் ஜனவரி 5 ஆம் திகதி இடம்பெறும் என்ற அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here