ஜம்மு- காஷ்மீரில் மீண்டும் பாவனைக்கு வந்த சாலை!

ஜம்மு- காஷ்மீரில் வரலாற்று சிறப்பு மிக்க மொகாலயர் சாலை பத்து நாட்களுக்குப் பின்னர் மீண்டும் போக்குவரத்துக்கு திறக்கப்பட்டுள்ளது.

கடும் பனிப்பொழிவு மற்றும் நிலச்சரிவுகள் காரணமாக இந்த சாலை மூடப்பட்டிருந்தது. சோபியான் வழியாக காஷ்மீரை பூஞ்ச் மாவட்டத்துடன் இணைக்கும் முக்கிய வர்த்தக சாலையாக இது கருதப்படுகிறது.

இம்மாத தொடக்கத்தில் பீர் கி கலி எனுமிடத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஏராளமான வாகனங்கள் சிக்கி பாதை கிடைக்காமல் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. ஊருக்குத் திரும்ப முடியாமல் தத்தளித்த ஓட்டுனர்கள் பயணிகள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் ராணுவத்தால் மீட்கப்பட்டனர்.

மூன்று அடி உயரத்திற்கு பனிமூடிய சாலைகளில் போக்குவரத்து முடங்கியிருந்தது. இந்நிலையில் தற்போது பனிப்பாறைகள் அகற்றப்பட்டு, போக்குவரத்துக்கு  அனுமதிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here