மைத்திரி வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தை கலைத்த இரகசியம்: நீதிமன்றத்தை நாடுகிறார் சுமந்திரன்!

இலங்கை ஜனநாயக சோசசலிச குடியரசின் எட்டாவது நாடாளுமன்றத்தை கலைக்கும் ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவிப்பிற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் அறிவித்துள்ளார்.

“நான் மட்டுமல்ல, இன்னும் பல சட்டத்தரணிகளும் வழக்கு தாக்கல் செய்யவுள்ளனர்“ என்றும் தெரிவித்தார்.

19வது அரசியலமைப்பு திருத்தத்திற்கு முரணாக ஜனாதிபதியின் அறிவிப்பு வெளியாகியுள்ளதாக பல தரப்பிலிருந்தும் கண்டனங்கள் வெளியாகி வரும் நிலையில், கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் இந்த அறிவிக்கை வெளியிட்டுள்ளார்.

“19வது திருத்த சட்டத்திற்கு அமைவாக ஜனாதிபதியால் இப்போது நாடாளுமன்றத்தை கலைக்க முடியாது. இதற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படும். உடனடியாக யாரும் நீதிமன்றத்தை நாடக்கூடாது என்பதற்காகவே வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தை கலைக்கும் அறிவிப்பை வெளியிட்டார் ஜனாதிபதி. இதனால் இரண்டு நாட்கள் தாமதப்படுத்தப்படுகிறது. நாளை மறுநாள் திங்கள்கிழமை உயர்நீதிமன்றத்தை நாடுவேன்“ என்றார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here