உத்தியோபூர்வமாக அறிவிக்கப்பட்ட ஜனாதிபதி தேர்தலில் குழப்பமுண்டா?

எதிர்வரும் 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 05 ஆம் திகதி பொது தேர்தல் நடத்தப்படும் என நேற்று நல்லிரவு வெளியான விசேட வர்தமானியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் அரசியல் யாப்பின் 33 ஆவது உறுப்புரை 2(இ) உப உறுப்புரையின் கீழ் ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரத்திற்கு அமைவாக  இலங்கை பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளதுடன், 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17 ஆம் திகதி அன்று பாராளுமன்றம் மீண்டும் கூட்டப்படவிருப்பதாகவும்,  ஜனாதிபதியின் அறிவுறுத்தலுக்கு அமைவாக, ஜனாதிபதியின் செயலாளரினால் இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைவாக நாடாளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்யும் திகதி 2019 ஜனவரி மாதம் 05 ஆம் திகதியாகும்.

அத்துடன் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான கால எல்லை 2018 நவம்பர் மாதம் 19 ஆம் திகதி தொடக்கம் 2018 நவம்பர் மாதம் 26 ஆம் திகதியன்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடைவதாகவும், குறித்த அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும்,  உச்சநீதிமன்றின் அனுமதியின் பின்னரே தேர்தல் தொடர்பில் முடிவெடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய முரணான கருத்தை முன்வைத்துள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

இதேவேளை, ஜனாதிபதியின் இத்தகைய செயலை எதிர்த்து உச்சநீதிமன்றில் முறையீடு செய்யவுள்ளதாக ரணில் விக்ரமசிங்கவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அரசியலமைப்பு சட்டப்பிரிவு 144 இன்படி பாராளுமன்ற தேர்தல் தொடர்பான ஆட்சேபனை மனுக்களை, அது தொடர்பில் அப்போதைக்கு ஏற்புடையதாகவிருக்கும் ஏதேனும் சட்டத்திற்கிணங்க விளக்குவதற்கும் மேன்முறையீடுட்டு நீதிமன்றம் நியாதாதிக்கம் கொண்டிருத்தம் வேண்டும் என்பதோடு அதனை பிரயோகித்தலும் வேண்டும்.

எனவே, ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலான அறிவித்தலை ஜனாதிபதி வெளியிட்டுள்ள நிலையில், தேர்தல் ஆட்சேபனை மனுக்கள் தாக்கல் செய்யப்படுமா என்னும் கேள்விகளும் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here